மாண்டஸ் புயலால் சென்னை மெரினா கடற்கரை அலங்கோலமாக உள்ளது. மணல் பரப்பில் உள்ள மழைத் தண்ணீர் தனித்தனி குட்டை தீவுகள் போல் காணப்பட்டு வருகிறது. மேலும் அங்குள்ள மழைத் தண்ணீரில் பாசி பிடித்து துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன.
இதனால் அங்கு பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்றும் அபாயம் உருவாகி உள்ளது. இதனால் மெரினா பகுதி மக்கள் அவதி அடைந்துள்ளனர். கனமழையின் பாதிப்பால் மெரினா கடற்கரையில் உள்ள சிறிய பெட்டிகடைகள், மற்றும் ராட்டினங்கள் துருப்பிடித்து பழுதடைந்து அலங்கோலமாக ஆங்காங்கே கிடக்கின்றன.
மழையால் இந்த கடைகள் மேலும் சிதைந்து வருகின்றன. கடைகள் மற்றும் ராட்டினங்கள் மீண்டும் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளன. கடற்கரையில் துர்நாற்றம் வீசும் மெரினா மணல் பரப்பு பகுதியை மீண்டும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.