தமிழகத்தில் ஒரேநாளில் 5,495 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக, கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேசமயம், நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,495 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,97,066 ஆக உயர்த்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மேலும் 978 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், தலைநகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,47,591 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஒரேநாளில் 76பேர் உயிரிழந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 8,307 ஆக உயர்த்துள்ளது.
சிகிச்சைக்குப் பிறகு 6,227பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,649 பேர் அதிகரித்துள்ளது.