தமிழகத்தில் தற்போது ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
தென்மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனைக்குப் பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து தெரியவரும்.





