கொரோனா பாதிக்கப்பட்ட தெருக்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து மதுரையில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து மதுரையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மதுரை மாநகராட்சி உட்பட்ட 20 வார்டுகள் பரிசோதனை முகம் அதிகரிக்க திட்டமிட்டு, கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தெருக்களை மூடவும் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், பழைய வழிகாட்டுதலின் நெறிமுறைப்படி, அந்த பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.
Read more – கொரோனா எதிரொலி : இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்தில் தடை
மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், அவ்வாறு அணியாதவர்களை கண்காணிக்கவும் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து, மதுரை மாநகராட்சி உட்பட்ட 31 நகர்ப்புற சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.