வருகின்ற சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழ்நாடு இளைஞர் கட்சி தனித்து போட்டியிட உள்ளதால் அதன் முதற்கட்டமாக ஒரே மேடையில் 100 வேட்பாளர்களை அறிமுகம் செய்துள்ளது.
சென்னை :
ஜல்லிக்கட்டு புரட்சியில் உதயமான தமிழ்நாடு இளைஞர் கட்சி இன்று 5 ஆம் வருட துவக்க விழாவை கொண்டாடுகிறது. இந்த விழாவில் ஜல்லிக்கட்டு புரட்சியின் 5 ஆம் வருட வெற்றியை அடையாள படுத்தும் விதமாக ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர் சிலையை மாநில தலைவர், பொது செயலாளர், பொருளாளர், துணை தலைவர்கள் இணைந்து திறந்து வைத்தனர். இந்த அடையாள சின்னமானது தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு வெற்றி உலாவாக கொண்டு செல்ல உள்ளோம். ஏற்கனவே R. k.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டதோடு, 2019 பாராளுமன்ற தேர்தலிலும் 16 இடங்களில் மோதிர சின்னத்தில் போட்டியிட்டோம், தற்போது அதே மோதிர சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாடு இளைஞர் கட்சி கடந்த அக்டோபர் மாதம் இளைஞர்களின் வழிகாட்டி திரு அப்துல் கலாம் அய்யா அவர்களின் பிறந்தநாள் அன்று வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியில், துடிப்பான , திறமையான இளைஞர்களை கொண்டு தனித்து போட்டியிடுவோம் என்று ஊடகத்தின் வாயிலாக மக்களுக்கு வெளிப்படுத்தி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக முதற்கட்டமாக 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள 100 வேட்பாளர்களை இன்று ஒரே மேடையில் அறிமுக படுத்தியது. இது இன்றைய அரசியல் சூழலில் தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சியும் செய்யவில்லை என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்கிறோம். மீதி உள்ள வேட்பாளர்களையும் விரைவில் அறிப்போம்.
இந்த நிகழ்வில் திரு பழ கருப்பையா அவர்களும், பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்ரவர்த்தி , நடிகர் ராஜ சிம்மா , மற்றும் கையெழுத்து இயக்கம் தோழர்களும் கலந்து கொண்டனர். மேலும் பாமக மாவட்ட பொறுப்பு மற்றும் இளைஞர் அணியில் உள்ள நண்பர்கள், தமிழ்நாடு இளைஞர் கட்சியில் இணைந்தனர், அவர்களுடன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் கட்சியில் அவர்களை இணைத்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் இறுதி வரை கலந்து கொண்ட நடிகர் திரு ராஜ சிம்மா அவர்கள் தான் செய்து வரும் சமூக சேவைகள் கூட மற்ற அரசியல் கட்சிகள் தலையீட்டால் தடுக்க படுகிறது என்று வேதனை தெரிவித்ததோடு, அரசியலில் நிச்சயம் மாற்றம் வரவேண்டும் என்றும் அது இந்த ஆளும், எதிர் கட்சிகளால் தர முடியாது என்று தெரிவித்தார். தமிழ்நாடு இளைஞர் கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் பிடித்த காரணத்தால் தன்னை கட்சியில் இணைத்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பழ கருப்பையா ஊழலை ஒழிக்க இளைஞர் சக்தியால் மட்டுமே முடியும் என்று உறுதியாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், படித்த சமூகத்தில் படிக்காத தலைவர்கள் ஆட்சி செய்வது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை ஆட்சி செய்த கட்சியால், ஊழலை ஒழிக்க முடியவில்லை, முடியவும் முடியாது என்று திட்டவட்டமாக கூறினார். இது தெரிந்ததும் நல்ல தலைவர்கள் கொண்ட சிறு கட்சிகளும் அவர்களுடன் கூட்டணி செல்வது எந்த மாற்றத்தையும் தராது என்றும் கூறினார்.