தேமுதிகவிற்கு இனி நாங்களாக கூட்டணிக்கு அழைக்க மாட்டோம் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை :
தமிழகத்தில் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய நிலையில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருந்தது.
இந்தநிலையில், மக்கள் நீதிமய்யத்தின் சார்பில் ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 30 தொகுதிகள் வழங்கப்பட்டது. இதேபோன்று மக்கள் நீதி மய்யத்தின் துணை பொதுச்செயலாளர் பொன்ராஜ் தேமுதிக கட்சிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு தேமுதிகவில் இருந்து பதில் அளிக்கவில்லை.
Read more – அதிமுகவில் இருந்து 3 அமைச்சர்கள் புறக்கணிப்பா ? வெளியான வேட்பாளர் பட்டியல்
எனவே, நாங்களாக தேமுதிகவிற்கு இனிமேல் அழைப்பு விடுக்க மாட்டோம் எனவும், தேமுதிக கூட்டணியில் சேர தானாக முன்வந்தால் ஏற்றுக் கொள்வோம் எனவும் மக்கள் நீதி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.