தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முக ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தமாக 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு கொரோனா பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க சமூக இடைவெளியும் கடைபிடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பல திரை பிரபலங்கள் முதல் பல்வேறு பொதுமக்கள் வரை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்கு அளித்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவானது இன்று இரவு 7 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Read more – ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… காத்திருந்து வாக்களித்த நடிகர் சூர்யா…
இந்தநிலையில், வாக்களிப்பதற்கு முன்பு முக ஸ்டாலின், அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் வணங்கி மரியாதை செலுத்தினார்.மேலும், முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.




