நான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நிச்சயம் உங்களுக்கு வலிமை அப்டேட் கிடைக்கும் என்றும் வானதி சீனிவாசன் ட்வீட் செய்துள்ளார்.

கோவை :
அஜித்தின் 60-வது படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
வலிமை தொடர்பான தகவல்களை படக்குழு எப்போது வெளியிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எனவே பிரதமர் தொடங்கி அனைவரிடமும் அப்டேட் கேட்டு சொல்லுமாறு கோரிக்கை வைத்தனர். இதனால் வருத்தமடைந்த நடிகர் அஜித், சிலர் செய்து வரும் செயல்கள் தன்னை வருத்தமடைய செய்வதாகவும், அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதுவரை பொறுமை காத்திருங்கள் என்று அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அஜித் ரசிகர் ஒருவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனிடம் வலிமை படம் அப்டேட் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் நான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நிச்சயம் உங்களுக்கு வலிமை அப்டேட் கிடைக்கும் என்றும் வானதி சீனிவாசன் ட்வீட் செய்துள்ளார்.
அதற்கு ரசிகர்கள் சிலர் அப்போ நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள் என்றும். இதற்காகவே உங்களை வெற்றி பெற வைக்கிறோம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.




