பாமக நிறுவனர் ராமதாஸ் நோட்டுக்காகவும், சீட்டுக்காகவும் தனது கொள்கைகளை அடகு வைத்து அரசியல் செய்கிறார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் தெரிவித்துள்ளார்.
சேலம் :
பாமக நிறுவனர் ராமதாஸ் மீது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அதேபோல், நேற்று சேலத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:
தமிழக உரிமைகளை தமிழக அரசு மத்திய அரசுக்கு காவு கொடுத்து வருகிறது. கடந்த 30 வருடங்களாக வன்னியர்களுக்கு 30 % இடஒதுக்கீடு வழங்கக்கோரி பல வன்னிய சங்கங்கள் போராடி வருகின்றனர். ஆனால், பாமக நிறுவனர் ராமதாஸுக்கு இதை பற்றி கவலை இல்லை. அவர் எப்பொழுதும் நோட்டுக்காகவும், சீட்டுக்காகவும் அதிமுகவிடம் கொள்கையை விற்று வாழ்ந்து வருகிறது.
Read more – புதுச்சேரியில் நடைமுறைக்கு வருகிறதா குடியரசு தலைவர் ஆட்சி.. வாய்விட்டு கதறும் நாராயணசாமி..
லோக்சபா தேர்தலுக்கு முன்னர் அதிமுகவை சேர்ந்த முதல்வர் மற்றும் துணை முதல்வரை டயர் நக்கி என்ற விமர்சித்து வந்த ராமதாஸ் தற்போது அவரது கல்வி நிறுவனங்கள் வன்னியர் நல வாரியத்திற்கு சேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் பா.ஜ.க – அதிமுக கூட்டணியில் சேர்ந்து உள்ளது என்றார். மேலும், திமுக நெய்வேலி தொகுதியில் எனக்கு வாய்ப்பு வழங்கினால் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.