விவோ நிறுவனத்தின் ஒய் 52 எஸ் இந்த மாதம் டிசம்பர் 10-ல் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
விவோ ஸ்மார்ட்ஃபோனின் ஒய் சீரிஸ் மக்களிடையே நல்ல விமர்சனம் இருந்து வரும் நிலையில் இதன் அடுத்த ஒய்52 எஸ் இந்த மாதம் 10ல் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை இந்நிறுவனம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட் ஃபோனின் மதிப்பு இந்திய சந்தைகளில் ரூ. 22543 ஆக இருக்கும். மொபைல் கலர் ப்ளூ, க்ரே மற்றும் டைட்டானியம் உள்ளிட்டவை கிடைக்கிறது.
READ ALSO- அதிருப்தியில் ஐ-ஃபோன் 12 சீரிஸ் பயனாளர்கள்!
மேலும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. டிஸ்பிளே 6.58 எல்சிடியாக இருக்கும். இதன் ப்ரைமரி கேமரா 48 மெகா பிக்சல் மற்றும் செகண்டரி கேமரா 2 எம்பியுடன் உள்ளது. மேலும் இதன் செல்ஃபி கேமரா 8 எம்பியாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.