சாம்சங் கேலக்ஸி M31s ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாதத்தில் அமேசான் தளம் வழியாக அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் அறிமுக விலை ரூ.20,000.
M31s ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயக்க முறைமையில் இயங்குகிறது. இதில் 6 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 9611 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.
128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 6,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரலாம் என்று கூறப்பட்டுள்ளது. புதிய சாம்சங் கேலக்சி M31s ஸ்மார்ட்போன், 64 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் மற்றும் AMOLED இன்ஃபினிட்டி ஓ டிஸ்ப்ளே உள்ளிட்ட குவாட் ரியர் கேமரா செட்-அப் உடன் வெளிவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வேரியண்டின் விலை ரூ .19,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரியை 15W சார்ஜிங் வசதியுடன், ஒன்யூஐஐ அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 10 இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்க மெமரி அம்சத்துடன் வருகிறது.