ஃபேஸ்புக் மீது தொடரப்பட்ட வழக்கு காரணமாக வாட்ஸப் மற்றும் இன்ஸ்டாகிராமை விற்கும் சூழலுக்கு அது தள்ளப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் தனது வளர்ச்சிக்காக மற்ற போட்டி நிறுவனங்களை விலை கொடுத்து வாங்கி அதன் வளர்ச்சியை தனக்கு சாதமாக்கி கொள்வதாக அமெரிக்க வர்த்தக ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதனை நிரூபிக்கும் வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸப் மற்றும் இன்ஸ்டாகிராமை அதிக விலை கொடுத்து வாங்கியிருப்பதை வர்த்தக ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டில் ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராமையும், அதேபோல 2014ல் வாட்ஸப் நிறுவனத்தையும் பல ஆயிரம் கோடிகள் கொடுத்து வாங்கியது ஃபேஸ்புக் நிறுவனம்.
READ MORE- கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை என்ன தெரியுமா?
ஆனால் தற்போது இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், வாட்ஸப் மற்றும் இன்ஸ்டாகிராமை விற்கும் நிலைக்கு ஃபேஸ்புக் தள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.




