கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பதி மலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் எடை வெகுவாக குறைந்து இருந்தது தொடர்பாக பக்தர் ஒருவர் சமூக வலைதளத்தில் ஆதாரத்துடன் வீடியோ பதிவிட்டு இருந்தார். அதாவது இருப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அப்போது முதல் லட்டு கவுண்டரில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்த ஊழியர்களை தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் தீவிரமாக கண்காணிக்க துவங்கினர். மேலும் லட்டு கவுண்டரில் கள்ள சந்தை வியாபாரத்தை ஒழித்து கட்டவும் தேவஸ்தானம் தீவிர முயற்சியில் இறங்கியது.