சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரொனா பாதிப்பால் வடமேற்கு ஷின்ஜியாங் மாகாணத்தில் “போர்க்கால அவசரநிலை” அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து சீனாவின் வடமேற்கு ஷின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு “போர்க்கால அவசரநிலை” அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாக 47 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சீனாவில் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. கொரோனாவ் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,634 ஆகவும் 83,682 பாதிப்புகளும் பதிவாகி உள்ளன.