
நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அண்மையில் பிறந்த ஆண் குழந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மான்செஸ்டர் யுனைடட் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் இவருடைய காதலி ஜார்ஜினா கர்ப்பமாக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிறிஸ்டியானோ மற்றும் ஜார்ஜினாவுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
இந்நிலையில் தனது ஆண் குழந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதாக ரொனால்டோ ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனால் பெற்றோராகிய எங்களுக்கு மிகுந்த மனவேதனை ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் பெண் குழந்தை இருப்பது ஆறுதல் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், எங்களுடைய ஆண் குழந்தை இறந்துபோனது ஆழ்ந்த சோகத்தை அளித்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள வேதனை எனது பெற்றோரையும் பாதித்துள்ளது. ஆனால் பெண் குழந்தை இருப்பது ஆறுதலையும், வலிமையையும் தருகிறது.
என் ஆண் குழந்தையை காப்பாற்ற முயன்ற மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோருக்கு நன்றி. தயவு செய்து இதுதொடர்பாக எங்களிடம் யாரும் தகவல் கேட்டு வரவேண்டும். தனிமையாக இருக்க விரும்புகிறோம். எங்களுக்கு பிறந்த ஆண் குழந்தை, எப்போதும் எங்களுடைய கடவுள். நான் அதன்மீது அன்பு செல்த்துவோம் என்று கிறிஸ்டியானோ ரொனோல்டோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.