அமெரிக்காவில் நீர்வீழ்ச்சி ஒன்றின் அருகே நின்று செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழந்தார்.

கிருஷ்ணா மாவட்டத்தின் குட்லவலெருவைச் (Gudlavaleru) சேர்ந்த போலவரபு கமலா, பட்டப்படிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்த நிலையில் படிப்பு முடித்து, அங்குள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருந்தார்.
இந்த நிலையில், அட்லாண்டாவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பிய வழியில், பால்ட் நீர்வீழ்ச்சியில் வருங்கால கணவருடன் கமலா செல்பி எடுக்கும்போது தவறி இருவரும் நீரில் விழந்தனர். இதில் இளைஞன் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மயக்க நிலையில் மீட்கப்பட்ட கமலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.




