தென் கொரியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக் காரணமாக இதுவரை குறைந்தது 15 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் 1,500 க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

தென் கொரியாவில் தொடர்ச்சியாக 42 நாட்கள் பெய்த மழையின் காரணமாக, இரண்டு பகுதிகளை பேரழிவு மண்டலங்களாக பிரதமர் சுங் சை-கியூன் அறிவித்துள்ளார்.இது கடந்த ஏழு ஆண்டுகளில், நாட்டில் பெய்த மிக நீண்ட பருவமழை என்றுக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், நெரிசலான முகாம்களில் வைரஸ் பரவக்கூடும் என்று மக்களிடையே அச்சம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தலைநகர் சியோலில், பாதைகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நாடு முழுவதும் சுமார் 1,300 வீடுகள் நீரில் மூழ்கி அல்லது நிலச்சரிவில் புதைக்கப்பட்டிருக்கலாம் என செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது, அதே நேரத்தில் கிட்டத்தட்ட 1,000 சாலைகள் மற்றும் பாலங்களும் சேதமடைந்துள்ளன. விவசாய நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கனமழையால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும், பலரைக் காணவில்லை என்றும் மத்தியப் பேரிடர் மற்றும் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.