ஸ்காட்லாந்தில் பெண்களுக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
உலகிலேயே முதல்முறையாக ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இலவசமாக நாப்கின்கள் அளிக்கும் மசோதா கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஸ்காட்லாந்து அரசு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “மாதவிடாய் பொருட்கள் தேவைப்படும் அனைவருக்கும் கவுன்சில்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூலம் இலவசமாக கிடைக்க ஆவன செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள கழிவறைகளில் சுகாதார பொருட்களை இலவசமாக வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.