பிஜிங்கில் கடந்த ஜூன் 15 ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது.அந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் வீரமரணம் அடைந்தனர் .ஆனால் இந்த மோதலில் காயமடைந்த மற்றும் மரணமடைந்த வீரர்கள் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த மோதல் குறித்து வதந்தி பரப்பியதாக சீனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தாங்டெங் நிறுவனம் தான் சீன ராணுவத்திற்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தாக்குதல் கருவிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்த நிறுவனம் தயாரித்த பாதுகாப்பு உடைகள் தரமற்றவை.எனவே தான் சீன ராணுவத்தினர் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை என்று சோ லியாங் என்ற சீனர் இணையத்தில் வதந்தியைப் பரப்பி உள்ளார்.
இந்த உறுதிச் செய்யப்படாத தகவலை அரசு அனுமதியின்றி சமூக வலைதளங்களில் பரப்பியதற்காக சோ லியாங் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இந்த தகவலை கடந்த 3 ஆம் தேதி இணையத்தில் வெளியிட்டதாகவும்,4 ஆம் தேதி சுற்றிவளைத்ததாகவும்,பின்பு அவரிடம் இருந்து மன்னிப்பு கடிதம் ஒன்றும் பெறப்பட்டுள்ளது.