பாகிஸ்தான் ராணுவ கொடுமைகளை எதிர்த்து ஐ.நா.சபையில் பேசிய பெண் ஆர்வலர் கரீமா கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கனடா:
பலுசிஸ்தான் பாகிஸ்தானில் இருந்து தென்மேற்கே அமைந்த பெரிய மாகாணம். இங்கு இயற்கை வளங்கள் அதிகமாக பகுதி என்பதால் இங்கு வாழும் ஒரு பகுதி மக்கள் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டும் என்று வருகின்றனர்.
பாகிஸ்தான் ராணுவத்தினர் இங்கு வாழும் ஒரு பகுதி மக்களை தொடர்ந்து துன்புறுத்தியும்,கொலை மற்றும் கடத்தி மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக நீடிக்கும் ராணுவ கொடுமைகளுக்கு எதிர்த்து பலுசிஸ்தானில் வாழ்ந்து வரும் சமூக ஆர்வலர்கள் சிலர் கேள்வி எழுப்பியும், குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில்,பலுசிஸ்தானில் வசித்து வந்த கரீமா பலுச் என்ற பெண் ஆர்வலர் சுவிட்சர்லாந்தில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தொடரில் பாக்கிஸ்தான் ராணுவ அடக்குமுறைபற்றி எடுத்து பேசினார்.மேலும் அவர் கடந்த 2019 ம் ஆண்டு மே மாதத்திலும் கூட, பலுசிஸ்தான் வளங்களை பாகிஸ்தான் எதுக்கு கொள்ள முயற்சி செய்து அங்கு வசிக்கும் மக்களை அழித்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
Read more-ஊழல் வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றங்கள் : உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு
கனடாவில் அகதியாக வசித்து வந்த கரீமாவை கடந்த ஞாயிற்று கிழமையில் இருந்து காணவில்லை என்று டொரண்டோ போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். இந்த நிலையில் தீடிரென அவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.ஏற்கனவே இதேபோல் கடந்த மே மாதம் பலுச் பத்திரிகையாளர் சாஜித் உசைன் சுவீடன் நாட்டில் மர்மான முறையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 2016 ம் ஆண்டு 2016ம் ஆண்டு உலகின் 100 செல்வாக்கான பி.பி.சி.யின் பெண்கள் பட்டியலில் கரீமா பலுச் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.