ரஷ்யாவில் , கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட KHABAROVSK மாகாண ஆளுநரை விடுதலை செய்யக்கோரி 10 ஆயிரம் பொதுமக்கள் பேரணி சென்றனர். அண்மையில் கொலை வழக்கு ஒன்றில் தொடர்பு இருப்பதாக KHABAROVSK மாகாண ஆளுநர் செர்கெய் புர்கல் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி 10 ஆயிரம் பொதுமக்கள் பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனர்.குற்றம் நிரூபிக்கப்பட்டால் செர்கெய் புர்கலுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.