பாகிஸ்தானில் மாமியார் ஒருவர் தன் மருமகனுக்கு AK-47 துப்பாக்கி பரிசளித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிறது.
பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த திருமணத்தில் மணமகனுக்கு அவரது மாமியார் வித்தியாசமான பரிசு ஒன்றை அளித்தார். இதை திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சியுடனும், ஆச்சரியமுடனும் பார்த்து ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிறது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் மணமகனுக்கு முத்தமிட்டு ஆசிர்வாதம் வழங்குகிறார். அதன்பின் அவர் மணமகனுக்கு திருமண பரிசாக AK-47 துப்பாக்கியை பரிசாக அளிக்கிறார். அதை புதுமாப்பிள்ளை மகிழ்ச்சியுடன் பெரும் சமயத்தில் அருகில் இருந்தவர்கள் கத்தி ஆரவாரம் செய்கின்றனர். 30 நொடிகள் மட்டுமே நீளம் கொண்ட அந்த வீடியோவை பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளர் அதீல் அஹ்சன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வீடியோவின் கமெண்டில் ஒருசாரர் இதுபோன்ற சம்பவங்களால் தான் பாகிஸ்தான் தீவிரவாத நாடு என அழைக்கப்படுகிறது என பதிவிட்டுள்ளனர். இந்த கருத்தை எதிர்க்கும் விதமாக வேறு சிலர் சில குடும்பங்களில் வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை மருமகன் அல்லது பேரனுக்கு வழங்குவது வழக்கம். இது கௌரவமாகவே நாங்கள் பார்க்கிறோம். இது தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் செயல் அல்ல என பதிவிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் : 7 அடி உயர ஆணுறுப்பு சிலை மாயம்: தேடுதல் வேட்டையில் போலீஸார்