அமெரிக்காவில் தனது மகளையும், மாமியாரையும் சுட்டுக்கொன்ற நபர் இறுதியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ஸ்கோடாக் நகரை சேர்ந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பூபிந்தர் சிங் (57). இவரது மகள் ஜஸ்லீன் கவுர் (14), மாமியார் மன்ஜித் கவுர் (53) ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் சம்பவத்தன்று குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியதால் ஆத்திரமடைந்த பூபிந்தர் சிங் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டுள்ளார்.
திடீரென ஏற்பட்ட இந்த தாக்குதலால் பூபிந்தர் சிங்கின் மகள் ஜஸ்லீன் கவுரும், மாமியார் மன்ஜித் கவுரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தனர். மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டில் ராஸ்பல் கவுர் என்ற 40 வயது பெண் ஒருவரும் படுகாயம் அடைந்த நிலையில், கையில் குண்டு காயத்துடன் வீட்டில் இருந்து தப்பி ஓடி உயிர்பிழைத்தார். ராஸ்பல் கவுர் அந்த வீட்டிற்கு எந்த முறை என்று தெரியவில்லை.
Read more – மாங்காடு அருகே நாயின் கால்களை உடைத்து கொடூர கொலை : 3 பேருக்கு வலைவீச்சு
இதனைத் தொடர்ந்து பூபிந்தர் சிங் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நியூயார்க் மாகாண போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலில் தப்பி பிழைத்த ராஸ்பல் கவுர் போலீசாரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.