தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர் விடாமல் கேள்விகளை முன்வைத்தார்,பதில் கூற முடியாமல் டிரம்ப் தடுமாறினார்.

அதிபர் டிரம்ப்பிடம் பிற நாடுகளை விட அமெரிக்காவில் இறப்பு விகிதம் உள்ளதைப்பற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த டிரம்ப், இறப்பை பார்க்காதீர்கள் உலகளவில் அதிக பாதிப்பை பாருங்கள் என்றும் கூறியுள்ளார். உலகின் பிற நாடுகளை விடவும் அமெரிக்காவில் உயிரிழப்பு அதிகம் உள்ளன என்று மீண்டும் செய்தியாளர் கேட்டதற்கு பதிலளிக்க முடியாமல் தடுமாறினார்.
அரசியல் செய்தியாளர் Jonathan Swan என்பவர் எந்தவித பயமும் இன்றி அதிபர் டிரம்பிற்கு சரமாரியான கேள்விகளை முன்வைத்தார்.அடுக்கடுக்கான கேள்விகளால் அதிபர் டிரம்ப் திக்குமுக்காடிப்போனார் .
பிறகு பதிலளித்த டிரம்ப் மக்கள் தொகை அடிப்படையிலேயே கொரோன உயிரிழப்பை கணக்கிட வேண்டும் என்று பதிலளித்தார்.




