அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலுக்கு மத்தியில் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இருப்பினும் தற்போதைய அதிபர் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தார். மேலும், தான் இந்த முடிவை ஏற்க முடியாது எனவும் கூறி வந்தார். அத்துடன் தான் தோல்வி அடைந்தாக அவர் முறைப்படி இதுவரை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகளை சட்டத்தின் வழியாக எதிர்க்கும் நடைமுறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற அவர் தற்போது சம்மதம் தெரிவிவித்துள்ளார். அத்துடன் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பிற்கு பரிந்துரைத்துள்ளார்.



