அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான கூட்டம் நடைபெற்றபோது அதை எதிர்த்து டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.
வாஷிங்டன் :
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் வெற்றிபெற்றார். வருகின்ற ஜனவரி 20 ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவி ஏற்கவுள்ளார்.
தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் ஜோ பைடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டி வருகிறார். மேலும், ஜோ பைடன் மீது அடுத்தடுத்து வழக்குகளையும் பதிவு செய்து வருகிறார். தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் டிரம்ப் மாகாண தேர்தல் அதிகாரிகளிடம் தனக்கு அதிக வாக்குகள் கிடைக்க ஏற்பாடு செய்யும் படியும் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் படியும் பேசிய ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், ஜோ பைடன் வரும் 20 ம் தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டு அந்த சான்றிதழை வழங்க எந்த தடையும் விதிக்கப்போவதில்லை என்று துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையை நோக்கி டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி செய்தபோது காவல் துறையினர் கலந்து போக உத்தரவிட்டனர்.
Read more – இன்றைய ராசிபலன் 07.01.2021!!!
மேலும், ஆதரவாளர்கள் போராட்டத்தை தீவிர படுத்த முயற்சித்த போது அவர்கள் மீது போலீசார் துப்பாகி சூடு நடத்தினர். அதில் பெண் ஒருவர் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதனால் வெள்ளை மாளிகை சுற்றி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.