அடுத்த 24 மணி நேரத்திற்குள் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கொரோனா பரவலின் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.தற்போது தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு,3 லட்சத்தை தாண்டி கொரோனாவினால் உயிரளவு ஏற்பட்டும் வருகிறது.நேற்று மட்டும் அமெரிக்காவில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பைசர் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Read more-டெல்லி விவசாய போராட்டம் : 15 ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு
இதுகுறித்து டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்,அமெரிக்காவில் பைசர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட இருக்கிறது,இதனால் பைசர் தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த எப்.டி.ஏ அனுமதி அளித்ததை தொடர்ந்து அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொரோனாவிற்கான முதல் தடுப்பூசி செலுத்தப்படும். மேலும் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள்,முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி மற்றும் மூத்த குடிமக்கள் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.