மணப்பெண் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பிரேசில் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டை சேர்ந்தவர் டியோகோ ரபேலோ. இவருக்கும் விட்டர் புவெனோ என்ற பெண்ணிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டியோகோ தனது திருமண வேலைகளில் கவனம் செலுத்தி கொண்டு வந்தார்.
இந்நிலையில் டியோகோ ரபேலோ(மணமகன் ) மற்றும் விட்டர் புவெனோ(மணமகள்) ஆகிய இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டியோகா உடனான திருமணத்தை ரபேலோ ரத்து செய்ய முடிவெடுத்து அவரிடம் தெரிவித்துள்ளார்.
அதைக்கேட்டு முதலில் அதிர்ச்சியடைந்த டியோகோ பின்னர் திட்டமிட்டபடி தனது திருமணத்தை நடத்த முடிவெடுத்தார். அதன்படி அவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வதாக தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் பஹியாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் டியோகோ தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். அவரின் இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 40 பேர் மட்டும் கலந்து கொண்டனர்.