கொரோனா தொற்றுநோய் ஏற்படுத்திய பெரிய தாக்குதலுக்கு பிறகு சுமார் ஆறு மாதங்களை தாண்டி தற்போது வரும் சனிக்கிழமை அன்று துபாயில் 13 ஆவது ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கின்றது. இதில் தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது.

சென்ற வருடம் சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த முறைம்வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்போது பல மடங்கு எகிரி உள்ளது.மேலும் சிஎஸ்கே அணியில் இருந்து தற்போது விலகி உள்ள ஸ்டார்பேட்ஸ்மென் ஆன சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக யார் களமிறங்க போகிறார்கள் ? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவருக்கு பதிலாக யார் களம் இறங்க போகிறார்கள் என்பது வரும் சனிக்கிழமை தெரிந்துவிடும்.

இதனிடையே இப்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ஆகாஷ் சோப்ரா சென்னை அணியில் தன் விருப்ப வீரர்களான 11 வீரர்கள் பட்டியலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கும்போது : வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் ஓபனிங் பேட்ஸ்மேன் களாக இறங்கி ஆட வேண்டும் .

மூன்றாவது வீரராக டூபிளெஸ்ஸிஸ் மற்றும் நான்காவது வீரராக ஜாதவ் மிடில் ஆர்டரில் ஐந்தாவதாக தோனி களம் காணலாம் அதற்குப் பிறகு ஜடேஜா, பிராவோ ஆகியோர் ஆடப் போவதால் பிற்பகுதியிலும் சென்னை அணியின் பலம் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். பவுலிங்கை பொருத்தவரை பியூஷ் சாவ்லா, தீபக் சஹர், ஷர்துல் தாகூர்,இம்ரான் தாகிர், ஆகியோர் ஆடுவது சரியானதாக இருக்கும் என்றும்அவர் கூறியுள்ளார்.
அவர் அறிவித்துள்ள உத்தேச அணி இதோ : வாட்சன், ராயுடு, டூபிளெஸ்ஸிஸ், ஜாதவ், தோனி, ஜடேஜா, பிராவோ, இம்ரான் தாகீர், பியுஷ் சாவ்லா, தீபக் சாகர், ஷர்துள் தாகூர்




