மலையாள நடிகர் ஃபஹத் பாசில் படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என்று கேரள தியேட்டர் உரிமையாளர்கள் கூறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து தியேட்டர்கள் பல மாதங்களாக முடங்கியிருந்தன. அதனால் திரைத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை ஓடிடி தளங்களில் வெளியிட ஆரம்பித்தனர். ஆனால் தற்போது லாக்டவுன் முடிந்து ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பிவிட்ட போதும் சில நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஓடிடி-யைத் தேர்வு செய்து வருகின்றனர். சூர்யா நடிப்பில் வெளியான சூ’ரரைப் போற்று’ படத்திற்கும் இந்தப் பிரச்சினை எழுந்தது.
தற்போது மலையாள நடிகர் ஃபஹத் பாசில் நடித்துள்ள ‘ஜோஜி’ என்ற திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் அவர் நடித்த ‘இருள்’ மற்றும் ‘சி யூ சூன்’ ஆகிய படங்களும் ஓடிடி தளத்தில் தான் வெளியானது.
எனவே ஃபஹத் பாசில் தன் படங்களைத் தொடர்ந்து ஓடிடி தளங்களில் வெளியிடுகிறார் என்ற குற்றசாட்டு எழுந்தது. இதனால் கேரள திரையரங்கு உரிமையாளர்கள் ஃபஹத் பாசில் படங்களைத் தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என்று தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.