தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு பரிசளித்து பாராட்டுக்களை தெரிவித்து இருக்கிறார் நடிகர் விஜய் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது வெற்றிமாறனின் அசுரன் திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம் ஒன்றை மேடையில் பேசியதற்காக அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்றார். தொடர்ந்து வருங்கால வாக்காளர்களே நீங்கள் தான். பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் கலாச்சாரத்தை நீங்கள் தான் மாற்றியமைக்க வேண்டும். உங்கள் பெற்றோரிடம் சொல்லி பணம் வாங்காமல் ஓட்டு போட சொல்ல வேண்டும் எனவும் கூறினார்.டைரக்டர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். விடுதலை 2 , வாடிவாசல், வடசென்னை 2 ஆகிய படங்களை முடித்த பின்பு நடிகர் விஜய்யுடன் டைரக்டர் வெற்றிமாறன் இணைய உள்ளதாக ஒரு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டைரக்டர் வெற்றிமாறன் நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்குவாரா என்கிற கேள்விக்கு பதிலளித்த வெற்றிமாறன். “நடிகர் விஜய்யும் நானும் இணைந்து படம் பண்ணுவது குறித்து நீண்ட நாட்களாக பேசி வருகிறோம் அவரும் என் படத்தில் நடிக்க தயாராக உள்ளார். கைவசம் உள்ள படங்களை முடித்த பின் நிச்சயம் விஜய்யுடன் இணைவேன் எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.