பாய்ஸ் படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒரு ஹீரோவாக நடித்தவர் நடிகர் நகுல் நடிகை தேவயானியின் தம்பியான நகுல் முதல் படத்தில் பார்ப்பதற்கு மிகவும் குண்டான தோற்றத்தில் இருந்தார்.

ஆறு வருட இடைவெளிக்குப்பிறகு புதுப் பொலிவுடன் உடல் எடையை குறைத்து காதலில் விழுந்தேன் படத்தில் நடித்தார் அந்தப்படத்திற்கு பிறகு மாசிலாமணி, வந்த ராஜாவா வருவேன், தமிழுக்கு ஒன்றை அழுத்தவும் போன்ற கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
நகுல் தனது நீண்ட நாள் தோழியான ஸ்ருதியை கடந்த 2016 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார், தனது பிறந்த நாளன்று தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். விரைவில் எங்கள் குடும்பத்தில் ஒரு புது வரவை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் அந்த புகைப்படம் இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.