தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் இருக்கிறா? இல்லையோ குரூப்பிசம் இருக்கிறது என நட்டி நடராஜன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட்டில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படுவதாகும் புகார்கள் எழுந்துவந்த நிலையில், சுஷாந்த சிங் ராஜ்புத்தின் மரணம் உலகிற்கு அதனை வெளிச்சம் போட்டு காட்டியது.
மேலும் ஏ.ஆர்.ரகுமான், ரசூல் பூக்குட்டி ஆகியோர் இந்தி பட உலகிற்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் தான் சதுரங்கவேட்டை, மிளகா உள்ளிட்ட படங்களில் நடித்த நட்டி நடராஜன் தமிழ் திரையுலகினைப்பற்றி பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

அதில் தமிழ் சினிமாவில் நெபோட்டிசம் இருக்கா? இல்லையான்னு தெரியல. ஆனால் இங்கு என்ன நடக்க வேண்டும் என்பதை யாரோ தீர்மானிக்கின்றனர். இதனை பார்க்கும் போது நிச்சயம் குரூப்பிசம் உள்ளது என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதே போன்று நடிகர் சாந்தனுவும், தமிழ் சினிமாவில் குரூப்பிசம் உள்ளது என்ற கருத்தினை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.




