பிகில் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய் “கைதி”புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்”படத்தில் நடித்து முடித்துவிட்டார் ஏப்ரல் மாதம் வெளியாக வேண்டியத்திரைப்படம் கொரோனா நோயின் காரணமாக படம் வெளியீடு தள்ளி போய்க்கொண்டு இருக்கிறது.
நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் மாஸ்டர் படம் பற்றிய முதல் விமர்சனத்தை அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளார். மாஸ்டர் படம் நன்றாக வந்துள்ளது. போஸ்ட் புரடெக்ஷன் பணிகளின் போது மாஸ்டர் படத்தை பத்து முறையாவது பார்த்திருப்பேன், ஒவ்வொரு முறை பார்த்த போதும், முதல் முறை பார்த்தது போன்ற உணர்வையே படம் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என அவர் கூறியுள்ளார்.