தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ், தெலுங்கில் பில்லா, வர்சம், சத்ரபதி போன்ற படங்களில் நடித்து வந்த பிரபாஸ்க்கு,ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
சகோ திரைப்படத்திற்கு அடுத்த படியாக பிரபாஸ் வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் நடிக்க உள்ளார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற ‘மகாநடி’ என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இப்படத்தை இயக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தெலுங்கில் தீபிகா படுகோனே நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.