சந்தானம் நடித்திருக்கும் ‘பிஸ்கோத்’ திரைப்படத்தின் கலகலப்பான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பிசியாக வலம் வந்து ஒட்டுமொத்த முன்னனி நாயகர்களையும் கலாய்த்து அப்லாஸ் வாங்கியவர் சந்தானம். தற்போது முழு நேர கதாநாயகனாக கலக்கி வருகிறார். தற்போது இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கித்தில், சந்தானம் நடித்துள்ள திரைப்படம் பிஸ்கோத்.
ஊரடங்கிற்கு முன்னதாகவே படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், பிஸ்கோத் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான தமிழ்ப்படம் பாணியில், முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி பழைய படங்களை கிண்டலடிக்கும் வகையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. டோலிவுட்டின் பாகுபலி, கோலிவுட்டின் பில்லா மற்றும் ஹாலிவுட்டின் ஸ்பார்டன் என பல படங்களை நகைச்சுவையாக ஸ்ப்பூஃப் செய்து லொல்லு சபா ஸ்டைலில் வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் இத்திரைப்படத்தில் தாரா அலிஷா, சௌகார் ஜானகி, ஆடுகளம் நரேன், நான்கடவுள் ராஜேந்திரன், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பாகுபலியில் சிலையை தூக்கி நிறுத்துவது, இடைவேளையில் சத்தியராஜ் பிரபாஸை அடையாளம் காண்பது போன்ற காட்சிகள் கலாய்த்து இருப்பத்து வேற லெவல்.
கொரோனா முன்னெச்சரிக்கையாக மாஸ்க் அணிவது, தனிமனித இடைவேளை போன்றவற்றையும் சந்தானம் வழக்கம்போல், போகிற போக்கில் மசாலாவாய் பயன்படுத்தி உள்ளார்.
இறுதியாக தியேட்டர்கள் திறக்க லேட் ஆனால் என்ன செய்வது என்று ஆனந்தராஜ் அரசவையில் அமர்ந்து கேட்க, ஓடிடி தான் என கூறும் லொள்ளு சபா மனோகரை, ஓசி ஐடி வைச்சிருக்குற திமிர்ல பேசுறியா என்று கலாய்த்து அவரை அடிக்கிறார் சந்தானம். இதன் மூலம் இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்பில்லை என்று நகைச்சுவையாக சொல்லியிருக்கிறது படக்குழு.