இந்த கொரோனா காலத்தில் மக்கள் யாரை மறந்தாலும் சோனு சூட் என்ற மாபெரும் திரைப்பட நடிகரை மறக்க மாட்டார்கள்.

புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல தன் சொந்த செலவில் வாகனம் ஏற்படுத்தி கொடுப்பது ஆகட்டும், ஆந்திராவில் மாடு இல்லாமல் தன் பெண் குழந்தைகளை வைத்து ஏர்பூட்டிய விவசாயிக்கு ட்ராக்ட்டர் வாங்கி தந்ததில் ஆகட்டும்,இதற்கெல்லாம் மேலாக தனது பிறந்தநாள் பரிசாக கொரோனாவால் வேலையிழந்த 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தர உள்ளதாக அதிரடியாக அறிவித்தார் இதனால் சோனு சூட் ஒரு வாழும் தெய்வமாகவே திகழ்கிறார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆதரவற்ற பலருக்கு உதவிக்கரம் நீட்டி தொடர் சேவையாற்றி வரும் சோனு சூட் மக்களிடையே ரியல் ஹீரோவாக மாறிவருகிறார்.

இவர் தற்போது கபில் சர்மா தொகுத்து வழங்கும் பிரபல பாலிவுட் டி வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். பிரபல தனியார் டிவி அந்த நிகழ்ச்சியின் சில நிமிட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் சோனு சூட் மூலம் உதவி பெற்ற பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவருக்கு உருக்கமாக நன்றி தெரிவித்தனர். இந்த வீடியோவை பார்த்த சோனு சூட், நிகழ்ச்சி மேடையிலேயே கண்கலங்கினார்.இந்த வீடியோ இப்போது “ட்ரெண்ட்”ஆகி வருகிறது.