விருமாண்டி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சாய் தீனா. இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் வட சென்னையில் தான்.அதன் பிறகு ஆரண்ய காண்டம், எந்திரன், வாலு, தெறி, திமிருபுடிச்சவன், வட சென்னை என்று பல படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார் சாய் தீனா.

தெறி படத்தில் குழந்தைகளை பிச்சை எடுக்கவைக்கும் நெகடிவ் ரோலில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். சமீபத்தில் தீனா தன்னுடைய போட்டோ ஷூட் புகைபடங்களை சமூகவலைத்தளத்தில் ஷேர் செய்தார் “தீனா”வா இது என்று நினைக்கும் அளவுக்கு தன்னுடைய லுக் மற்றும் ஹேர் ஸ்டைல் அனைத்தையும் மாற்றி மாடர்ன் தோற்றத்திற்க்கு தன்னுடைய உருவத்தை மாற்றி இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் தீனாவா என்று வாயடைத்து போயிருக்கிறார்கள்அதுமட்டும் அல்லாமல் அந்த புகைபடங்களை சமூகவலைத்தளதில் “ட்ரெண்ட்” செய்து வருகிறார்கள்..

