தமிழகத்தில் அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான சான்றிதழ் பதிவேற்றம் இன்று தொடங்கவிருந்த நிலையில் அதனை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பிற்கு மத்தியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் சான்றிதழ் பதிவேற்றம் தொடங்கவிருந்த நிலையில், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கும் எனவும் அதனை http://tngasa.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் எனவும் அதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை 2.09 லட்ச மாணவர்கள் கலை- அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பம் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.