மத்தியப்பிரதேசத்தில் செல்பி மோகத்தில் நடு ஆற்றில் சிக்கிக்கொண்ட 2 மாணவிகளை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்
மத்தியப்பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் பெங்கேடி கிராமத்தில் உள்ள pench ஆற்றிற்கு 6 மாணவிகள் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றலாம் என்ற எண்ணத்தில் வந்துள்ளனர். தற்போது தான் எங்கு சென்றாலும் தனது புகைப்படங்களை செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டதே. இதே போன்று தான் pench ஆற்றிற்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள வந்த மாணவிகளில் 2 பேர் ஆற்றின் நடுவே உள்ள பாறை மேல் நின்று செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் துர்திஷ்டவசமாக, பாறையின் மேல் நின்று செல்பி எடுத்துக்கொண்டிருக்கும் போது, ஆற்றின் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் செய்வதறியாது மாணவிகள் திகைத்து நின்றதோடு உதவிக்கேட்டு கூச்சலிட்டுள்ளனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கிராம மக்கள் உதவியுடன் கயிறு கட்டி நடுஆற்றில் சிக்கிக்கொண்ட இரு மாணவிகளை பத்திரமாக மீட்டனர்.