மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த அதிகாரி பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : மூத்த அதிகாரி
பணியிடங்கள்: 37
கல்வித் தகுதி : B.E Mechanical Engineering, MBA,B.E Instrumentation and Control Engineering, LLB (Bachelor of Legislative Law), B.E Petroleum Engineering, B.E
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 29 முதல் 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறையின் படி வயதில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.60,000 முதல் ரூ.1,80,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.oil-india.com என்ற இணையதளம் மூலம் 30.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : கணினி அடிப்படையிலான சோதனை (சிபிடி), குழு கலந்துரையாடல் (ஜிடி) / குழு பணி (ஜிடி) மற்றும் தனிப்பட்ட நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.500
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.oil-india.com அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.