வட கிழக்கு எல்லை ரயில்வேயில் பயிற்சியாளராக பணிபுரிய விருப்புபவர்களுக்கான, பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, வட கிழக்கு எல்லை ரயில்வே ஆணையம் வெளியிட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மொத்தப் பணியிடங்கள் : 4499
நிறுவனம் : வட கிழக்கு எல்லை ரயில்வே (North East Frontier Railway (NF Railway))
வேலை இடம் : அசாம், பிகார், மேற்கு வங்கம், கெளஹாத்தி
பதவி மற்றும் காலியிடங்கள் : பயிற்சியாளர்கள் (Apprentice) – 4499
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nfr.indianrailways.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று, கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களுடன், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு, ஐ.டி. ஐ. (10, +2) படித்தவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : இதற்கான வயது 15 முதல் 24 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.09.2020
மேலும், இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://nfr.indianrailways.gov.in/cris//uploads/files/1597317634676-Act%20App%20Notification%20Final.pdf என்ற இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!




