Tuesday, July 15, 2025
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

சாதனை செல்வி சாதனா- பார்கவி பழனியப்பன்

September 14, 2022
செய்தி அலை சிறுகதைப் போட்டி – 48 சாதனை செல்வி சாதனா பார்கவி பழனியப்பன்

சாதனா….. பதினாரு வயது நிரம்பிய பதினொன்றாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி. அம்மா அப்பாவின் ஒரே செல்லமகள். படிப்பில் கெட்டிக்காரி, கலை திறமைகள் அதிகம். நன்றாக படிப்பதால் பள்ளி ஆசிரியர்களின் பாராட்டுக்குரிய மாணவியாகவும் திகழ்ந்தாள். கலைகள் சம்மந்தப்பட்ட அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்பாள். ஓவியம், நடனம், கவிதை, நாடகம்,  கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி என அனைத்திலும் சிறந்தவளாக திகழ்ந்தாள். அனைத்து திறமைகளும் படைத்த சாதனாவின் வாழ்க்கையில், படைத்த இறைவன் செய்த சதியும் உள்ளது……!

            அனைத்தும் இனிமையாக சென்ற நேரம், தலையில் இடி விழுந்தார் போல் அந்தச்செய்தி கிடைத்தது. சாதனாவிற்க்கு அடிக்கடி தலை சுற்றலும் தலை வலியும் ஏற்ப்பட்டிருக்கிறது.   படிப்பிலும்   கவனம் செலுத்த இயலவில்லை. ஆசிரியர்களிடம் பாராட்டுகள் மட்டுமே பெற்றவள் அவர்களின் திட்டுகளையும் பெற துவங்கினாள். தலைவலி அதிகமான காரணத்தால் அவள் பெற்றோர்கள் மருத்துவரை அனுகினர், பேரதிர்ச்சி ஒன்று காத்திருப்பதை அறியாமல்…..!

திருட்டு வழக்கை முறையாக விசாரிக்காத உதவி ஆணையர் பணியிடை நீக்கம்!

கொள்கைத் தலைவருக்கு மதியத்திற்கு மேல் மரியாதை!

சீமானின் பாஸ்போர்ட்; நீதிமன்றம் அதிரடி!

             சாதனாவை முழுவதுமாக பரிசோதித்த மருத்துவர் சாதனாவின் அப்பா அம்மாவை பார்த்து தயங்கியவாறு ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். “டாக்டர்…… என்னாச்சு….? ரிப்போர்ட் எல்லாம் நார்மல் தானே…..?” என்று சாதனா அம்மா யதார்த்தமாக கேட்டார். டாக்டர் தயங்கினார்.

             “அது….. அதை எப்படி சொல்றதுனே தெரியல….”, என டாக்டர் தயங்க, இருவரும் புரியாமல் அவரைப் பார்த்தனர். “இந்த சின்ன வயசில் அந்த குழந்தை எப்படி அதை தாங்குமோ…… சாதனாவுக்கு ப்ரைன் டியூமர்…….”, டாக்டர் சொன்னதை கேட்டு இருவரும் அதிர்ந்தனர். சாதனா அப்பா, எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று மன்டியிட்டு அழுதார். அம்மா கதறினார், கடவுளிடம் தன்னுயிரை எடுத்துக்கொண்டு மகளை காப்பாற்றும்படி கதறினார். “ஆப்ரேஷன் பண்ணா காப்பாத்தலாம்…… ஆனால் அதுக்கு சான்ஸ் குறைவுதான்…..” என்றார் டாக்டர்.இருவரும் கலங்கிபோய் நின்றனர்….!

               ஆப்ரேஷனும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. சாதனா ஆப்ரைஷனுக்கு அதிகம் பணம் தேவைப்பட்டது. இவர்கள் ஓரளவு வசதி உள்ளவர்கள் என்பதால் ஈடு செய்ய முடிந்தது. வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட சாதனா, மூன்று மாதங்கள் படுக்கையில் ஓய்வு எடுத்தாள். ஆனால் அவள் முழு சுயநினைவுக்கு வரவில்லை. பித்து பிடித்தது போல் இருந்தாள். அவள் பள்ளியில் பயிலும் சக மாணவிகளும் அவளை வந்து கண்டனர். நன்றாக படித்த மாணவி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டத்தில் முதல் மாணவியாக வந்தவள் என்ற காரணத்திற்க்காக மட்டுமே அந்த பள்ளி தலைமை ஆசிரியரும், சக ஆசிரியர்களும் வந்து அவளை கண்டனர். ஆனால் மீண்டும் பள்ளியில் அவள் பயில அனுமதிக்கவில்லை. சாதனாவுக்கு அதிர்ச்சி தரும் செய்தி தெரியக்கூடாது என்றாலும் இந்த செய்தி அவளை வந்து எட்டிப்பார்த்தது. மனதொடிந்து போனாள் சாதனா. ஆனால் அந்த சுயநலம் பிடித்த பள்ளி நிர்வாகம், இது பதினொன்றாம் வகுப்பு ஆண்டு முடிவு என்பதனால் பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் இவள் பெயரும் இடம் பிடித்திருந்தது. ஆகையால் தேர்வு எழுத மட்டும் அனுமதித்தார்கள். அதனால் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் போதும் என்று அதற்க்கு மட்டும் பயில சொன்னார்கள். சாதனா தேர்வும் எழுதினாள் முடிவகளும் வந்தது. பொதுத்தேர்வில் அவள் மதிப்பெண் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியும், அவள் பெற்றோருக்கு ஆனந்தத்தையும் தந்தது. ஏனென்றால், பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வில் நானூற்றி பத்து மதிப்பெண்கள் பெற்றிருந்தாள். அவள் தேர்ச்சியாகுவாளா….? என்று நினைத்த பள்ளி நிர்வாகத்துக்கு இது அதிர்ச்சி தானே…?

             ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு படிக்க அனுமதிக்கவில்லை. ஏனென்றால் அதுமிகவும் கடினாமாக இருக்கும் என்றார்கள். ஆனால் சாதனா மூலையில் முடங்கிவிடாமல் ஆறுமாதத்திற்க்குள் தன்திறமையை வளர்த்துக்கொண்டு மற்றவர்களுக்கும் புரியவைத்தாள். சாதனா கவிதை எழுதும் திறன்கொண்டவள் என்பதால் ஆறுமாதங்களில் இருநூறு கவிதை புத்தகத்தை வெளியிட்டாள்.

             இப்பொழுது மேடையில் அவளைபற்றி சில வரிகள் சொற்பொழிவாற்றினார்கள். பின்னர் அவள் பெற்றோரை மேடைக்கு அழைத்து, குறைந்த நேரத்தில் அதிகமான  கவிதை புத்தகத்தை வெளியிட்டதை பாராட்டி அந்த விருதை அவள் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கண்கலங்கியபடி அதை பெற்றுக்கொண்டனர். இவை அனைத்தையும் புன்னகை மாறமல் பார்த்தது மேடையில் உள்ள மலர்மாலை சூட்டப்பட்டிருந்த அவள் புகைப்படம்.

             சாதனை என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு மயில்  கல் போல். அது கலை படைப்புகளாகவும், விளையாட்டு திறமைகளாகவும், கல்வி திறனாகவும் சாதனைகள் பிரிக்கப்படுகிறது. உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுபவர்கள் மட்டும் சாதனையாளர்கள் அல்ல. வாழ்க்கையில் பல போராட்டங்களையும் பலவித மனிதர்களையும் எதிர்த்து வெற்றியடையும் நபர்களும் சாதனையாளர்களே. அப்படி ஒரு சாதனை செல்விதான் சாதனா.

********************

Previous Post

கண்ணாடி பிம்பங்கள்- தனுஜாஜெயராமன்

Next Post

VIDEO: இணையத்தை தெறிக்கவிடும் குட்டி பட்டாசு…

Next Post

VIDEO: இணையத்தை தெறிக்கவிடும் குட்டி பட்டாசு...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

திருட்டு வழக்கை முறையாக விசாரிக்காத உதவி ஆணையர் பணியிடை நீக்கம்!

July 15, 2025

கொள்கைத் தலைவருக்கு மதியத்திற்கு மேல் மரியாதை!

July 15, 2025

சீமானின் பாஸ்போர்ட்; நீதிமன்றம் அதிரடி!

July 15, 2025

முதலமைச்சரின் பகல் கனவு!

July 15, 2025

கருணாநிதி சிலை மீது தார் ஊற்றிய மர்மநபர்களால் பரபரப்பு

July 15, 2025

உதயசந்திரன், ராஜேஷ்லக்கானி ஆஜராக உத்தரவு!

July 14, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version