கடந்த 19ம் தேதி நியூயார்க்கை மாகாணத்தை பனிப்புயல் ஒன்று தாக்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு தீவிரமடைந்து வருகிறது. இங்குள்ள ஹேரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 180 சென்டி மீட்டர் பனி பொழிவு ஏற்பட்டுள்ளது.
நியூயார்க்கின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், வீடுகளை பல அடிக்கு பனி மூடி இருக்கிறது. ஹம்பர்க் நகரத்தில் 6 அடிக்கு மேல் பனி கொட்டி கிடப்பதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.புஃபெல்லா நகர் முழுவதையும் பனிப்போர்வை மூடி இருக்கும் டிரோன் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
உறையவைக்கும் கடும் குளிர் எதிரொலியாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. பனிப்பொழிவு இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளதால் நியூயார்க் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் டன் கணக்கில் கொட்டி கிடக்கும் பனி குவியலை அகற்றும் பணியை நியூயார்க் மாகாண நிர்வாகம் முடுக்கிவிட்டிருக்கிறது.