ஆஸ்திரேலிய பீச்சில், கோபக்கார ஆக்டோபஸ் தாக்கியதில் இளைஞர் ஒருவருக்கு கழுத்தில் தடிப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஜியோகிராஃப் விரிகுடாவில், ஆக்டோபஸுக்கும் மனிதர் ஒருவருக்கும் இடையே நடந்த சந்திப்பின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. புவியியலாளராக இருக்கும் லான்ஸ் கார்ல்சன், தனது குடும்பத்தினருடன், ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள ஜியோகிராப் விரிகுடா ரிசர்ட்டில் தங்கியிருந்தார். தான் தங்கியிருந்த ரிசார்ட்டுக்கு அருகில் கடலில் குளிக்க திட்டமிட்டிருந்தனர்.
தனது இரண்டு வயது மகளுடன் கடலுக்குள் இறங்கிய போது, தண்ணீருக்குள் வால் போன்ற பகுதி ஒன்று தென்பட, அவர் அதனை பெரிதுபடுத்தவில்லை. அது அருகில் வந்த போது தான், அது ஆக்டோபஸ் என அவருக்கு தெரிந்தது. ஆழமற்ற நீரில் தெளிவாக தெரிந்த அந்த ஆக்டோபஸ், திடீரென கோபமடைந்திருக்கிறது. அது தன்னை நோக்கி வருவதை வீடியோவாக எடுக்க துவங்கினார்.
அதனை தொடர்ந்து அவர் வீடியோவாக எடுக்க, ஆக்டோபஸ் அவரது பின்னாலேயே வந்து கொண்டிருந்தது. பின் கடற்கரைக்கு திரும்பிய அவர்கள், சன் பாத் செய்ய, கார்ல்சன் மட்டும் மீண்டும் கடலுக்குள் இறங்கினார். அப்போது அவரை அந்த ஆக்டோபஸ் தாக்கியிருக்கிறது. அதிர்ச்சி அடைந்த அவர், கரைக்கு திரும்பி பரிசோதித்ததில் அவரது கை, கழுத்து மற்றும் முதுகின் மேல்பகுதியில் ஆக்டோபஸ் தாக்கிய அச்சு இருந்திருக்கிறது. அங்கு வினிகர் இல்லாத காரணத்தால், கோக கோலாவை காயத்தின் மீது ஊற்றியிருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.