ஆகஸ்டு 5 முதல் ஆகஸ்டு 15 வரை நினைவுச் சின்னங்களை அருங்காட்சியகத்தில் இலவசமாக பார்வையிடலாம் என தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தொல்லியல்துறை கீழ் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் முக்கிய சுற்றுலாத் தளங்களை ஆகஸ்டு 5ம் தேதி முதல் ஆகஸ்டு 15ம் தேதி வரை பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.