திருமணம் ஆனதை மறைத்து மீண்டும் திருமணம் செய்வதைத் தடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் அறிவுரை.
திருமணம் ஆனதை மறைத்து மீண்டும் திருமணம் செய்வதைத் தடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் அறிவுரை.
நாட்டில் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து மீண்டும் திருமணம் செய்வதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை அடுத்துள்ள குன்றத்தூரில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டைவிட்டு ஏற்கனவே திருமணமானவருடன் ஓடிவிட்டார்.
இதையடுத்து மகளை மீட்டுத்தரக்கோரி அப்பெண்ணின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான் விசாரணையின்போது, நீதிபதிகள், ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து பெண்களைத் திருமணம் செய்யும் ஆண்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தார். இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் தமிழக அரசுசார்பில் ஒர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து கூறிய நீதிபதிகள் இதுபோன்ற விவகாரங்களால் சமூக மதிப்பு மோசமாகிறது என்று, இப்பிரச்சனைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இப்பிரச்சனைக்கு என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று பரிந்துரைக்க வேண்டுமெனக் கூறி உதவி சொலிசிட்டர் நோட்டீஸ் பெறவேண்டுமென தெரிவித்துள்ளனர்.




