சென்னை: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று மாலை மாவட்ட ஆட்சியர்களுடன்,தமிழக தலைமைச்செயலர் காணொளிகாட்சி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 1 லட்சத்து 56 ஆயிரத்து 369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இதனை கட்டுக்குள் கொண்டுவர மாநிலம் முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. இருந்த போதும் பாதிப்பின் எண்ணிக்கை தினமும் 4 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துவருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்து மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து அனைத்து மாவடட ஆட்சித்தலைவர்களுடனும் தமிழக தலைமை செயலர் சண்முகம் இன்று மாலை 4.30மணிக்கு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்
இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகே அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.