முதலிரவு அறையில் கணவனுக்கு மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி சம்பவம் ஆடிப்போன கணவனின் பரிதாப நிலை நிகழ்ந்துள்ளது.

உத்திரபிரேதசம் மாநிலம் பிஜினோரில் இருக்கும் குர்தா கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் புரோக்கர் வழியாக மணப்பெண் பார்த்துள்ளார். ஹரித்துவார் பகுதியை சார்ந்த பெண்ணை திருமணம் செய்ய பேசி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மாப்பிளை இரவு முதலிரவு அறையில் காத்துகொண்டு இருந்துள்ளார்.
மணப்பெண் பால் சொம்போடு வரமல் கட்டையை எடுத்து வந்து விளக்கை அனைத்து மாப்பிளையை கட்டையால் பயங்கரமாக தாக்கியுள்ளார். மாப்பிளை மயங்கியதும் அங்கிருந்த 2 லட்சம் திருமண நகை மற்றும் பணத்துடன் தப்பியோடியுள்ளார்.
மயக்கம் தெளிந்த மாப்பிளை உறவினர்களிடம் விஷயத்தை கூறவே உடனடியாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்ணை நிச்சயம் செய்ய உதவியாக இருந்த புரோக்கரும் தலைமறைவாகியதும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.




