ரவீந்திர ஜடேஜா ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சிங்கங்களின் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர் சிங் ஜடேஜா வெளியிட்ட வீடியோ ஒன்று பரபரப்பாகி வருகிறது. காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த வீடியோவை எடுத்திருக்க வேண்டும். சாலையில் சிங்கங்கள் நடந்து செல்வதாக அந்த வீடியோ அமைந்துள்ள நிலையில், மொத்தம் மூன்று சிங்கங்கள் மிகவும் சாதரணமாக மக்கள் செல்லும் சாலை ஓரமாக நடந்து செல்லும் இரவு நேரத்தில் வாகனத்தில் இருக்கும் வெளிச்சத்தை கொண்டு இந்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
விலங்குகள் வாகனத்தில் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. இந்த வீடியோவை தற்சமயம் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பதிவில் “இப்படியான ஒரு அனுபவத்தை நான் இதுவரை அடைந்ததே இல்லை” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ இதுவரை 2300க்கும் அதிகமான ரீ டிவிட்களையும் நாற்பத்தி நான்காயிரத்திற்கும் அதிகமான லைக் களையும் பெற்றுள்ளன.
மனிதர்களாகிய நாம் விலங்குகளின் இடங்களை ஆக்கிரமித்து வருகிறோம். இதனால் விலங்குகள் தங்குவதற்கு இடமின்றி நாம் வாழும் பகுதிக்கு வருகின்றன. இதை பற்றி அனைவரும் யோசிக்க வேண்டும்” என இன்னொருவர் கூறியுள்ளார். ஐ.பி.எல் ரசிகர் ”சென்னை சூப்பர் கிங்” குழுவின் அடையாளமான சிங்கம் எவ்வளவு அழகாக வெளியே சுற்றுகிறது பாருங்கள் என கூறியுள்ளார்.